ஓலா நிறுவனம் தன்னிடம் பணிபுரியும் அரசு ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் கசிந்து கொண்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஓலா நிறுவனத்தின் வருமானம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து 400 முதல் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் அந்தந்த பிரிவின் மேனேஜர்களிடம் சரியாக செயல்படாத ஊழியர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் ஓலா நிறுவனம் மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த நிறுவனத்திற்கு 5000 புதிய ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது