Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலில் 9 லட்சம் இப்போ 83 ஆயிரம் கட்டணம்: பயணிகளை அதிரவைக்கும் ஓலா

Advertiesment
கட்டணம்
மும்பையிலிருந்து புனே சென்று திரும்பிய பயணிக்கு ஓலா கால் டாக்ஸி ரூ.83 ஆயிரத்திற்கு பில் கொடுத்து அதிர்ச்சியை தந்துள்ளது.


 
மகாராஸ்டிரா மாநிலம் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த கமால் பாட்டியா என்பவர் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு ஓலா கால் டாக்ஸியில் புனே சென்று வீடு திரும்பினார்.

பயணத்தை முடித்த பயணிக்கு டாக்ஸி டிரைவர் ரூ.89,395 கட்டணம் செலுத்தக்கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். கமால் பாட்டியா விமானத்தில் சென்றால் கூட இந்தளவுக்கு செலவு ஆகாது என்று கூறியுள்ளார்.

ஆனால் டிரைவர் விடாமல் நீண்ட நேரம் வாக்குவாதம் செய்துள்ளார். ஓலா நிறுவனத்தினிடம் கமால் பாட்டியா அரை மணி நேரத்துக்கு மேல் சண்டையிட்ட பின்னரே கட்டணத்தை திருத்த ஒப்புக்கொண்டனர்.

கடைசியில் பயணம் செய்ததற்கான தொகையை மட்டும் செலுத்தியுள்ளார். இது ஓலா நிறுவனத்துக்கு இரண்டாவது முறையாகும். முதலில் தெலங்கானாவை சேர்ந்த பயணிக்கு ரூ.9 லட்சம் பில் கொடுத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெப்பமயமாகும் கடல்கள்: விளைவுகளும், காரணங்களும்......