காரில் பிரசவித்த பெண்ணிற்கு 5 வருட இலவச பயணம் - ஓலா அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (14:18 IST)
ஓலா காரில் குழந்தையை பிரசவித்த பெண்ணிற்கும், குழந்தைக்கும் அந்த கார் நிறுவனம் 5 வருடம் இலவச பயணத்தை பரிசாக அளிக்க முன்வந்துள்ளது.


 

 
புனேவைச் சேர்ந்த தம்பதியினர் ரமேஷ் சிங் - கிஷோரி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிஷோரிக்கு, கடந்த அக்டோபர் 2ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அதையடுத்து, அருகில் இருந்த கமலா நேரு மருத்துவமனைக்கு செல்ல, ஓலா காரை புக் செய்தார் ரமேஷ் சிங்.
 
ஆனால், காரில் செல்லும் போது கிஷோரிக்கு வலி அதிகமானது. அதைத் தொடர்ந்து காரிலேயே அவருக்கு பிரசவமும் ஏற்பட்டது. இதையடுத்து, வண்டியை கவனமாக ஓட்டிய ஓட்டுனர், விரைவாக மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றார். தாயும், சேயும் அங்கு நலமாக இருக்கின்றனர்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தாய் கிஷோரிக்கும், அவரது குழந்தைக்கும் ஒரு சிறப்பு கூப்பனை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.  அதன் மூலம், அவர்கள் இருவரும் அடுத்த 5 வருடங்கள் ஓலா காரில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments