ஓகி புயல் தீவரம் அடைந்து வருவதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவு பயணத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் வரத்தொடங்கி உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி-கேரள கடல் எல்லைப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஓகி புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்க சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படியும் குறிப்பாக மலைப்பாதைகள் மற்றும் காடுகள் வழியாக செல்லும் பக்தர்கள் கட்டாயம் இரவு நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.