Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிஷா ரயில் விபத்து: மூத்த பொறியாளர்கள் 3 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (20:32 IST)
ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக இன்று ரயில்வே மூத்த பொறியாளர்கள்  3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

ஒடிஷாவில் கடந்த 2 ஆம் தேதி இரவில் பெங்களூரு- ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்- சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், மற்றும் சரக்கு ரயில் 3 ரயில்களும் விபத்தில் சிக்கியது. இதில்,  293 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து மனிதத் தவறால் ஏற்பட்டதாகக் கூறி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்த ரயில் விபத்து இந்தியாவை உலுக்கிய நிலையில், இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த  நிலையில், இன்று ரயில்வே மூத்த பொறியாளர்கள்  3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

அருண்குமார்  மஹந்தா, முகம்மது அமீர்கான், பப்பு குமார் ஆகிய மூன்று பேரை ஆதாரங்களை அழித்தல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

அடுத்த கட்டுரையில்
Show comments