Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புயலிலிருந்து காக்க மூதாட்டியை சுமந்து சென்ற காவலர்கள்! – ஒடிசாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

Advertiesment
புயலிலிருந்து காக்க மூதாட்டியை சுமந்து சென்ற காவலர்கள்! – ஒடிசாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
, செவ்வாய், 25 மே 2021 (15:34 IST)
ஒடிசாவில் நாளை புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மூதாட்டியை முதுகில் சுமந்து போலீஸார் அப்புறப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் அந்தமான் தீவு அருகே கடல்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில் யாஸ் புயலாக உருமாறியுள்ளது. அடுத்த 12 மணி நேரத்திற்குள் அதிதீவிர புயலாக மாற உள்ள யாஸ் ஒடிசாவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒடிசாவில் புயல் கரையை கடக்க உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் புயல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பேரிடர் மேலாண்மை ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒடிசாவின் கேந்திரப்ரதா மாவட்டத்தில் உள்ள தல்சுவா பகுதியில் 96 வயதான மூதாட்டி ஒருவர் எழுந்து நடக்க இயலாத வகையில் வீட்டில் இருப்பதாக போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் புயல் காற்றால் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ள நிலையில் அங்கு வந்த போலீஸார் மூங்கில் கம்பில் தொட்டில் போல கட்டி மூதாட்டியை அதில் வைத்து அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு, தனியார் பள்ளிகளில் போக்சோ கண்காணிப்பு குழு: அரசுக்கு ரவிக்குமார் எம்.பி யோசனை