8 மாதங்களுக்கு காணாமல் போன இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு! காதலனே கொலை செய்த கொடூரம்..!

Mahendran
சனி, 6 செப்டம்பர் 2025 (14:57 IST)
ஒடிசா மாநிலத்தில் எட்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 22 வயது நிரூபமா பரிதா என்ற இளம் பெண்ணின் உடல், ஒரு சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அவரது காதலனான தேபாசிஸ் பிசோய் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
பூபனேஸ்வரை சேர்ந்த நிரூபமா பரிதா ஜனவரி 24 அன்று தனது சொந்த ஊரான ரன்பூருக்கு செல்வதாக கூறிவிட்டு, காணாமல் போனார். பல மாதங்களாக, அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.
 
இந்த நிலையில் நிரூபமாவின் செல்போன், அவரது மறைவுக்கு பின்னரும் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனை ஆதாரமாகக் கொண்டு, காவல்துறை  விசாரணை செய்ததில், தேபாசிஸ் பிசோய் தான் நிரூபமாவை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
நிரூபமாவை கொலை செய்து, அவரது உடலை கைவிடப்பட்ட சுரங்கத்தில் வீசியுள்ளார். மேலும், அவர் நிரூபமாவின் செல்போனை தொடர்ந்து பயன்படுத்தி, அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தையும் எடுத்துள்ளார். அந்த செல்போன் தான் அவரை காட்டி கொடுத்தது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments