Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்ரோவின் 100வது ராக்கெட்.. புவிவட்டப் பாதையில் செல்வதில் பின்னடைவு?

Advertiesment
இஸ்ரோவின் 100வது ராக்கெட்.. புவிவட்டப் பாதையில் செல்வதில் பின்னடைவு?

Siva

, திங்கள், 3 பிப்ரவரி 2025 (11:28 IST)
சமீபத்தில், இஸ்ரோ மிக வெற்றிகரமாக தனது 100ஆவது ராக்கெட்டை செலுத்தியது. அந்த ராக்கெட்டில் செலுத்தப்பட்ட NVS-02 என்ற செயற்கைக்கோள், புவி வட்டப்பாதையில் இருந்து மற்றொரு புவி வட்டப் பாதைக்கு செல்லும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NVS-02 என்ற செயற்கைக்கோள்களை தரை, வான், கடல் வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டிற்காக இஸ்ரோ வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள் கடந்த 29ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட், இஸ்ரோவின் 100வது ராக்கெட் என்ற நிலையில், அதன் சாதனையை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில், NVS-02 என்ற செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிறுத்த நிலைப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அதை புவி வட்டப் பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என தகவல் வெளியானது.

தற்போது, அந்த செயற்கைக்கோள் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை வலம் வந்து கொண்டு இருப்பதாகவும், அதன் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுடையது.. குறுக்க யார் இந்த சிக்கந்தர்? - எச்.ராஜா கேள்வி!