Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவரா?

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (12:37 IST)
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவரா?
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போப்டே அவர்கள் விரைவில் ஓய்வுபெற இருப்பதால் அடுத்ததாக மூத்த நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு இது குறித்த பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
மூத்த நீதிபதி என்.வி.ரமணா அவர்களின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 26 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த என்.வி.ரமணா கடந்த 2000ம் ஆண்டு ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். அதன்பின் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற இவர், 2014 பிப்ரவரி மாதம் முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments