Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 147 ஆக உயர்வு!

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (10:20 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது உறுதியாகியுள்ளது. 
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
 
கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நேற்று வரை இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. 
 
இந்நிலையில் இன்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. 147 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் ஏன் அழைக்கப்படவில்லை? ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments