கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல கட்டமாக நடந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்திய அளவில் பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜகவால் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்க முடியவில்லை.
அதே போல பாஜகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட உத்தர பிரதேசத்திலும் பாஜக கூட்டணியை விட இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. ஒருவேளை பாஜக ஆட்சியமைத்தாலும், கூட்டணி ஆட்சிதான் அமைக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நோட்டா சுமார் 2 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளது. அந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி கடைசி நேரத்தில் வேட்புமனுவைத் திரும்ப பெற்றார். இதனால் பாஜக வேட்பாளருக்கு எதிராக நோட்டாவுக்கு வாக்களிக்க சொல்லி காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். அதனால் சுமார் 1.95,344 வாக்குகள் பெற்றுள்ளது நோட்டா. நாட்டிலேயே நோட்டா அதிக வாக்குகள் பெறுவது இதுவே முதல் முறை.