Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா; மத்திய அரசை விமர்சித்த முதல்வர்!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:41 IST)
மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா; மத்திய அரசை விமர்சித்த முதல்வர்!
மேக் இன் இந்தியா அல்ல என்றும் ஜோக் இன் இந்தியா என்றும் மத்திய அரசை கடுமையாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் விமர்சனம் செய்துள்ளார். 
 
தெலுங்கானா ராஷ்டிரிய சமதி என்ற கட்சியை சமீபத்தில் பாரத ராஷ்டிய சமாதி கட்சி என்று பெயர் மாற்றம் செய்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது அண்டை மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். 
 
அப்போது அவர் பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையான தாக்கி பேசினார். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஜோக் இன் இந்தியா என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்தது என்றும்  பாஜக 16 ஆண்டுகள் ஆட்சி செய்தது என்றும், மொத்தத்தில் இந்தியாவை 75 ஆண்டுகளில் 70 ஆண்டுகள் இந்த இரு கட்சிகளை ஆட்சி செய்துள்ளன என்றும் இதனால் தான் நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
மேக் இன் இந்தியா பிரச்சாரம் ஒன்றும் சாதிக்கவில்லை என்றும் சீன பொருள்கள் தான் இந்தியாவில் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேக் இன் தி இந்தியா திட்டம் வெற்றி பெற்று இருந்தால் ஒவ்வொரு ஊரிலும் சைனா பஜார் எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments