Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ தேர்வு தேதி திடீர் மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 9 மார்ச் 2020 (20:58 IST)
சமீபத்தில் டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்தால் ஒரு வாரம் வரை வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. எனவே அந்த பகுதியில் நடைபெற வேண்டிய பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற வடகிழக்கு டெல்லி பகுதியில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ புதிய தேர்வு அட்டவணையை சற்றுமுன் சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது 
 
அதன்படி சி.பி.எஸ்.இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளதாகவும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21ஆம் தேதி சி.பி.எஸ்.இ தேர்வுகள் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த புதிய அட்டவணையின்படி வடகிழக்கு டெல்லி பகுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுத தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments