நல்லா கேளுங்கப்பா...கையில காசு இல்லைன்னு யாரும் சொல்லக் கூடாது - ராகுலின் ’புது ஐடியா ’

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (16:26 IST)
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை  அறிவித்து ஒரு மேடையில் ஸ்டாலின் முழங்கினார்.ஆனால் அவரது குரல் ஒருகை ஓசை போலவே அதிக சப்தமில்லாமல் தனித்து ஒலித்தது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியும் மம்தா பானர்ஜிக்கு நாட்டை வழிநடத்தக் கூடிய தகுதி உள்ளது என்று கூறியவர். இப்போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:
 
இந்தியாவில் உள்ள மக்கள்  கையில் செலவுக்கு பணம் இல்லை என்று சொல்லக்கூடாது என்பதற்கேற்ப மக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தும் திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவுத்துள்ளார்.
மேலும் ராகுல் தற்போது சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் நாட்டில் யாரும் செலவுக்கு பணம் இல்லாமல் இருக்கக்கூடாது. அவர்களது வங்கிக்கணக்கில் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
 
இந்த திட்டத்தில் எவ்வளவு பணம் செலுத்தப்படும் என்பதை காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில்  அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments