வெயில், மழை, குளிர், வெப்பம் பாராமல் ராணுவ வீரர்கள் எல்லையை பாதுகாத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. உயிரை பணயம் வைத்து ராணுவ வீரர்கள் பணிபுரிவதால்தான் நாம் நாட்டிற்குள் நிம்மதியாக வாழ முடிகிறது.
இந்த நிலையில் பங்காளதேஷ் எல்லையில் கனமழை பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு எல்லையை நமது ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
நாள் முழுவதும் தண்ணீரில் நின்றதால் ஒரு ராணுவ வீரரின் உள்ளங்காலின் ஒருபகுதி நீரில் ஊறியதால் உரிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீரரின் கடமை உணர்ச்சிக்கு ஈடு இணையான தியாகம் எதுவும் இந்த உலகில் இல்லை என்று கூறப்படுகிறது.