Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லிக்கு தண்ணீர் தர முடியாது: உச்சநீதிமன்றத்தில் இமாச்சல் பிரதேசம் திட்டவட்டம்..!

Siva
வியாழன், 13 ஜூன் 2024 (16:38 IST)
டெல்லியில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில் இமாச்சல பிரதேச மாநிலம் டெல்லிக்கு தண்ணீர் தர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் டெல்லி மக்கள் தண்ணீர் பிரச்சனையால் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் தடுமாறும் டெல்லிக்கு 137 கன அடி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் டெல்லிக்கு தண்ணீர் அனுப்புவதற்கு கூடுதலாக தங்களிடம் தண்ணீர் தற்போது இல்லை என்று இமாச்சல பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

நேற்றைய விசாரணையின் போது தண்ணீர் திறந்து விடப்பட்டதாக இமாச்சல பிரதேச அரசு கூறிய நிலையில் இன்று தண்ணீர் இல்லை எனவே தண்ணீர் திறந்து விட முடியாது என்று தெரிவித்துள்ளதை அடுத்து பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் டெல்லிக்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்லிவிட்டதை அடுத்து டெல்லியில் உள்ள மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments