Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் விசா கிடையாது: மத்திய அரசின் அறிவிப்பால் பரபரப்பு

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (07:57 IST)
இன்று முதல் ஏப்ரல் 15 வரை எந்த நாட்டிற்கும் விசா கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் நேற்று மரணமடைந்தார் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று முதல் ஏப்ரல் 15 வரை எந்த நாட்டிற்கும் விசா கிடையாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது அதுமட்டுமின்றி சீனா, இத்தாலி உள்பட ஒருசில நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் மற்றும் பயணிகள் மற்றும் இந்தியர்கள் அனைவரும் 15 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது 
 
இன்று முதல் ஏப்ரல் 15 இன்றுவரை எந்த நாட்டிற்கும் விசா கிடையாது என்றாலும் ஐநா சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள் போன்ற ஒரு சிலருக்கு மட்டும் விசா அளிக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. விசா விஷயத்தில் மத்திய அரசு கெடுபிடி காட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments