Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

Amitshah

Mahendran

, வெள்ளி, 17 மே 2024 (13:03 IST)
பாராளுமன்ற தேர்தலில் ஒருவேளை பாரதிய ஜனதா கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போய்விட்டால் பிளான் B திட்டம் உண்டா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி பதில் அளித்துள்ளார். 
 
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னும் மூன்று கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவர் பீகார் மாநிலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அரசியல் சாசனத்தை பாஜக மாற்றிவிடும் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர் கடந்த பத்து ஆண்டுகளாக அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு தேவையான இறுதி பெரும்பான்மை எங்களிடம் இருந்தது என்றும் ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் இந்திரா காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சி தான் அரசியல் சாசனத்தை தவறாக பயன்படுத்தியது என்றும் அவர் குற்றம் சாட்டினார். 
 
பாரதிய ஜனதாவுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் பிளான் B திட்டம் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித்ஷா ’பிளான் B திட்டம் அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்’ என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு