காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினரின் ஆதரவு கட்சி என்று கூறப்படும் நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட காங்கிரஸ் கட்சி நிறுத்தவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
குஜராத் மாநிலத்தில் போட்டியிட 35 முஸ்லிம் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அதில் காங்கிரஸ் தரப்பில் இருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
பொதுவாக முஸ்லிம் வேட்பாளர்களை காங்கிரஸ் அதிக அளவில் குஜராத் மாநிலத்தில் நிறுத்துவது வழக்கமாக இருக்கும் நிலையில் அக்கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆனால் காங்கிரஸ் கட்சியும் முறை ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
முஸ்லிம்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் குஜராத்தில் இல்லை என்றும் மேலும் முஸ்லிம் தரப்பில் இருந்து யாரும் போட்டியிட முன்வரவில்லை என்றும் அகமதாபாத் மேற்கு தொகுதியில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும் அந்த தொகுதி தனித்தொகுதி என்பதால் முஸ்லிம்கள் போட்டியிட முடியவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதியில் 35 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அனைவருமே சுயேட்சையாக போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது