Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடுக்கட்ட பணம் இல்லை.. சிறுவனை கடத்திக் கொன்ற டெய்லர்! – மும்பையில் அதிர்ச்சி!

Prasanth Karthick
செவ்வாய், 26 மார்ச் 2024 (13:12 IST)
மும்பையில் சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டி கொலை செய்த டெய்லரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



மும்பையின் தானே பகுதியை சேர்ந்தவர் முத்தாசிர். இவரது 9 வயது மகனான இபாதத் நேற்று முன் தினம் வீட்டின் அருகே உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக சென்ற நிலையில் மாயமானான். சிறுவனை பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் முத்தாசிருக்கு ஒரு ரகசிய போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் சிறுவனை தான் கடத்தி வைத்திருப்பதாகவும் ரூ.23 லட்சம் கொடுக்காவிட்டால் சிறுவனை கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து முத்தாசிர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ALSO READ: 15 வயதுக்கும் குறைவானவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை: அதிரடி மசோதா..!

அதை தொடர்ந்து போலீஸார் சிறுவனை தேடி வந்த நிலையில் சிறுவனின் வீட்டிற்கு அருகே ஒரு சாக்குப்பை கிடந்துள்ளது. அதை திறந்து பார்த்தபோது அதில் சிறுவன் பிணமாக கிடந்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முத்தாசிருக்கு வந்த போன் காலை ட்ரேஸ் செய்து சல்மான் என்ற டெய்லரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வீடு கட்ட பணம் இல்லாததால் சிறுவனை சல்மான் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவனை கொலை செய்தது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments