போர் நிறுத்த பேச்சுவார்த்தையை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது குறித்து கிரிக்கெட் வீரர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக போர் தீவிரமாக நடந்து வந்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா கொடுத்த பதிலடியை தொடர்ந்து இந்திய பகுதிகளை தாக்க பாகிஸ்தான் தீவிரமாக முயன்றது. ஆனால் இந்தியா அந்த தாக்குதல்களை முறியடித்தது.
இருநாடுகளிடையேயான போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்தார். ஆனால் அப்படி அறிவித்த பின்னரும் பாகிஸ்தான் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதுடன், பாகிஸ்தானையும் எச்சரித்தது. அதன் பின்னர் தாக்குதல்கள் முழுவதும் நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தானின் இந்த செயல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ”Kutte ki dum tedi ki tedi hi rehti hai” என பதிவிட்டுள்ளார். இதற்கு “என்ன செய்தாலும் நாயின் வாலை நிமிர்த்த முடியாது” என்று அர்த்தம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K