உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோவில்கள் உயரத்திற்கு கட்டிடங்கள் கட்டக்கூடாது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோயில்களின் புனித தன்மை மற்றும் நன்மதிப்பை பறைசாற்றும் வகையில் கோரக்பூர் மற்றும் வாரணாசி போன்ற கோவில்கள் அதிகம் உள்ள மத நகரங்களில் கோவில்களின் உயரத்துக்கு மேல் எந்த வகையான கட்டிடங்களையும் கட்டக்கூடாது என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த பரப்பளவில் 15 சதவீதத்தை பசுமையான இடமாக மாற்ற வேண்டும் என்றும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். புனிதமான கோவில்கள் உள்ள நகரங்களில் அந்த கோவில்களின் உயரத்தை விட அதிக உயரத்திற்கு கட்டணங்கள் கட்டக்கூடாது என்ற உத்தரவுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.