Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயத்திற்கான நகைக்கடன் ரத்து: மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (20:35 IST)
இந்தியா ஒரு விவசாய நாடு, இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் என சொல்லிக்கொண்டிருக்கும் மத்திய அரசு, விவசாயத்திற்கான மானியத்துடன் கூடிய நகைக்கடனை ரத்து செய்துள்ளதால் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு துறையாக நசிந்து வரும் நிலையில் விவசாயத்தையும் அரசு கைவிட்டால் விவசாயிகள் என்ன செய்வார்கள்? என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
 
ஒவ்வொரு மக்களின் பசியை போக்கும் விவசாயிகளின் உயிர் நாடியான விவசாயத்தை கைவிட்டுவிடக்கூடாது என தங்கள் வீட்டு நகைகளை அடமானம் வைத்தாவது விளைவித்த பயிரை காப்பாற்ற வேண்டும் என்பதே ஒவ்வொரு விவசாயியின் எண்ணமாக இருந்து வந்தது. அதன் காரணமாகத்தான் விவசாயிகள் நகைக்கடன் பெறும்போது மானியத்தை அரசு அறிவித்திருந்தது.
 
 
ஆனால் தற்போது வரும் அக்டோர் மாதம் முதல் வங்கிகளில் நகைகளை வைத்து விவசாயிகள் விவசாய கடனை குறைந்த வட்டியில் பெறும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மானியம் ரத்து செய்யப்படுவதால் இனி விவசாயத்திற்கான நகைக்கடன் கிடையாது என்ற தகவல் விவசாயிகளுக்கு பேரிடியாக உள்ளது. தேர்தலின்போது விவசாயிகளின் கடன் தள்ளுபடி என தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது கடனே இல்லை என்று கூறினால் எப்படி? கடன் இருந்தால் தானே தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எண்ணமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments