Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயில் சப்ளை கட்: ஏர் இந்தியாவுக்கு பாரத் & ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் வார்னிங்!!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (10:11 IST)
நிலுவை தொகை செலுத்தவில்லை என்றால் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும் என பாரத் & ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஏர் இந்தியாவை எச்சரித்துள்ளது. 
 
ஏர் இந்தியா நிறுவனம் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகிறது. இதனால், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருளுக்கான பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்தாமல் காலம் கடத்தி வந்துள்ளது. 
 
இதனால், அந்நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்த இனியும்  தவறினால் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 6 முக்கிய விமான நிலையங்களில் வரும் 18 ஆம் தேதி முதல் எரிபொருள் வினியோகத்தை நிறுத்தப்போவதாக எச்சரித்துள்ளது. 
 
இதற்கு முன்னர் ரூ.5000 கோடி நிலுவை தொகையை காரணம் காட்டி கொச்சி, மொஹாலி, புனே, ராஞ்சி, பாட்னா, விசாகப்பட்டினம் ஆகிய விமான நிலையங்களில் எரிபொருள் வினியோகத்தை எண்னெய் நிறுவனங்கள் நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எண்ணெய் நிறுவனங்களின் இந்த அறிவிப்பால் ஏர் இந்தியா மேலும் நெருக்கடியை சந்திக்க கூடும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments