நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளாதால், மக்களுக்கு சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுத்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயின் நிறுவனம், தெரிவித்துள்ளர்தாவது :
சமையல் எரிவாயுவை எதிர்கொள்ளத் தேவையான கூடுதலாக 50 % எரிவாயுவை எதிர்கொள்ள உள்ளதாக முடிவு செய்துள்ளோம்.
எத்தகைய சூழ்நிலையிலும், மக்களின் தேவைகளைச் சமாளிக்க எல்.பி.ஜி பிளாண்ட்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூட ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இன்றைய தேதி வரை 26 லட்சம் சிலிண்டர்கள் வரை சப்ளை செய்யப்பட்டுவருவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் யாரும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் எனப் பயப்பட வேண்டாம் .