ஏப்ரல் 1 முதல் ரூ. 2 லட்சத்திற்கும் மேலான ரொக்கப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 3 லட்சத்திற்கு மேலான நேரடி ரொக்கப் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு ஏப்ரல் 1 முதல் தடை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தடைக்கான வரம்பை ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும், ஏப்ரல் 1ம் தேதி முதலாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால், அதே மதிப்பிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.