Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை: மாயாவதியின் திடீர் அறிவிப்பால் பாஜக குஷி

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (22:34 IST)
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு மீது ஒருசில அதிருப்திகள் மக்கள் மத்தியில் இருந்தாலும் பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் காங்கிரஸ் தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி அமைய வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஒருசில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதில் முக்கியமான மாநிலங்களாக மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளது. இந்த இரண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என  பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

பாஜக போலவே காங்கிரஸ் கட்சியும்  பகுஜன் சமாஜ் கட்சியை அழிக்க பார்ப்பதாகவும், எனவே இருமாநிலங்களிலும்  பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் சோனியாவும் ராகுலும் தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பினாலும் ஒருசில காங்கிரஸ் தலைவர்கள் இந்த கூட்டணி அமைக்க விடாமல் தடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியுடன் மாயாவதி கட்சி கூட்டணி அமைக்கவில்லை என்றால் இந்த இரு மாநிலங்களிலும் பாஜக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று பாஜக தலைவர்கள் குஷியுடன் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments