பீகாரில் நிதிஸ்குமார் தலைமையிலான அரசு 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால், நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது..
பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த அரசின் மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் நிதிஸ்குமாருக்கு 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால், நம்பிக்கை மீதான வாக்கெடுப்பில் அவர் அரசு வெற்றி பெற்றுள்ளது.
இன்று சபா நாயகர் பாஜகவின் விஜயகுமார் சின் ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மகேஷ்வர் ஹ்சாரி 164 எம்.எல்.ஏக்களின் ஓட்டெடுப்பில் புதிய சபா நாயகராக தேர்வானார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.