Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

Advertiesment

Siva

, ஞாயிறு, 25 மே 2025 (08:09 IST)
நேற்று நடந்த 10வது நிதி ஆயோக்  கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் சந்திப்பு நடத்தினார். மேற்குவங்கம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் பீஹார் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதில் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் மட்டும் தான் தேசிய ஜனதா கட்சி  கூட்டணியை சேர்ந்தவர் என்பதால், அவர் வராதது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
‘விக்சித் ராஜ்யா, விக்சித் பாரத் @2047’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், உள்துறை அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச ஆளுநர்கள் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வராதது அரசியல் குறியீடு என காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் கூறினார். RJD தலைவர் மனோஜ் ஜா, “நிதி ஆயோக் கூட்டம் முக்கிய நேரத்தில் நடக்கிறது. பீஹார் முதல்வர் வராதது அவரது உரிமை, ஆனால் இது ஒரு குழப்பமான நிலையை காட்டுகிறது என்று தெரிவித்தார்.
 
2023, 2024 ஆண்டுகளிலும் நிதீஷ்குமார் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் உடல்நிலை காரணமாக நிதிஷ்குமார் வரவில்லை என்றும் அவர் வருகை தராதது குறித்து முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!