Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் வேட்பாளர் மாற்றமா? மோடிக்கு பதில் யார்?

Webdunia
திங்கள், 20 மே 2019 (09:13 IST)
நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருந்தாலும், கடந்த 2014ஆம் ஆண்டு போல் பாஜக தனித்து மெஜாரிட்டி பெற வாய்ப்பு இல்லை என்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சியை பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மெஜாரிட்டிக்கு இன்னும் சில தொகுதிகள் தேவைப்பட்டால் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் பாஜகவின் கூட்டணி கட்சிகளே பிரதமர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று இப்போதே குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக சிவசேனா கட்சி, மோடிக்கு பதில் ராஜ்நாத்சிங் அல்லது நிதின்கட்காரி ஆகிய இருவரில் ஒருவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றதாம். ஒருவேளை திமுக, பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தாலும் இதே நிலையை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
 
இப்படி ஒரு நிலைமை வந்தால் பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க மோடி தயாராக இருப்பதாகவே பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. மோடியை சமாதானப்படுத்த பாஜக தேசிய தலைவர் பதவியை கொடுக்கவும், அமித்ஷாவை அமைச்சரவையில் சேர்க்கவும் ஒரு திட்டம் தயாராக இருக்கின்றதாம். ஆனால் இவையெல்லாம் அரசியல் விமர்சகர்களின் கணிப்புகளே. உண்மையில் என்ன நடக்க போகின்றது என்பதை இன்னும் ஒருவாரம் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அதிமுகவை கைப்பற்ற ஆபரேசன் தாமரை? செங்கோட்டையன் சொல்வது என்ன?

இன்று முதல் 45 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. ரூ.75ல் இருந்து ரூ.110 கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments