Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாஸ்டேக் மூலம் இதுவரையிலான வசூல் எவ்வளவு? – அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:47 IST)
தேசிய நெடுஞ்சாலை சுங்கசாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் வசூலான தொகை குறித்து அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுங்க சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்க 2014ம் ஆண்டு ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் பலர் அதை பயன்படுத்தாததால் கடந்த 2021ம் ஆண்டு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் ஃபாஸ்டேக் மூலம் வசூலான தொகை குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த அமைச்சர் நிதின் கட்கரி “நாடு முழுவதும் 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை 4.59 கோடிக்கும் மேற்பட்ட ஃபாஸ்டேக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக்குகள் மூலம் இதுவரை 58,188.53 கோடி ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலாகியுள்ளது. 2020-ம் நிதியாண்டில் ஃபாஸ்டேக் மூலம் பெறப்பட்ட கட்டணம், 10,728.52 கோடி ரூபாயாக உள்ளது.

2021-2022 நிதியாண்டில் ஃபாஸ்டேக் மூலம் ரூ.26,622.93 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஃபாஸ்டேக் பயன்படுத்தும் 12.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து, தவறாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

நீ போகாத என்ன விட்டு..! தண்ணீர் பஞ்சத்தால் விட்டுச்சென்ற மனைவி! - கலெக்டரிடம் முறையிட்ட கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments