Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அணி மாறுகிறாரா நிதிஷ்குமார்.. மாறினால் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு..!

Siva
செவ்வாய், 4 ஜூன் 2024 (16:53 IST)
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன

இதனை அடுத்து பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

குறிப்பாக சந்திரபாபு நாயுடு உடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் வெற்றி பெற்ற 16 தொகுதிகள் இந்தியா கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அமைக்க வழிவகை செய்யும்

அதே போல் நிதீஷ் குமாரின் ஜனதா தளம் கட்சி 12 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் அந்த கட்சியும் இந்தியா கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் நிதிஷ்மாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

அது மட்டும் இன்றி சுயேச்சை உள்பட மற்ற சிறிய கட்சிகள் 17 எம்பிகள் இருப்பதால் அவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இது மூன்றும் சக்சஸ் ஆகிவிட்டால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments