Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 11 April 2025
webdunia

300ஐ தாண்டியது பாஜக கூட்டணி.. மீண்டும் பிரதமர் மோடி தான்.. தமிழகத்திலும் கால் வைத்த பாஜக..!

Advertiesment
காங்கிரஸ்

Siva

, செவ்வாய், 4 ஜூன் 2024 (08:51 IST)
பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் காலை 8 மணி முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது 300க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதை அடுத்து மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதும் மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்பதும் கிட்டத்தட்ட உள்ளது.

சற்றுமுன் வெளியான தகவலின்படி பாஜக கூட்டணி 321 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகவும் இந்தியா கூட்டணி 139 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகவும் மற்றவை 34 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஆட்சி அமைக்க தேவை மொத்தம் 273 தொகுதிகள் என்ற நிலையில் இந்த எண்ணிக்கை தொடர்ந்தால் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி அபாரமாக வெற்றி பெற்று வருகிறது என்பதும் அந்த கூட்டணி 32 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிமுக இரண்டு தொகுதிகளிலும் பாஜக இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தில் பாஜக கால் வைக்கவே முடியாது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இரண்டு தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவது அந்த கட்சியின் தொண்டர்களுக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரம்பமே அபாரம்.. 150ஐ தாண்டியது பாஜக கூட்டணி.. பின்னாடியே வரும் இந்தியா கூட்டணி..!