Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுக்கு நெடுஞ்சாலை பணி அனுமதி ரத்து! எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் இந்தியா!

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (15:52 IST)
கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் அரசுடன் கூடிய சீன நிறுவனங்களின் கூட்டு திட்டத்தையும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்திய – சீன எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இரு நாடுகளுக்கிடையே உறவு நிலையில் விரிசல் எழுந்துள்ள நிலையில் சீன செயலிகளை தடை செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் சீன வலைதளங்கள் மேலும் சிலவற்றை முடக்கும் நடவடிக்கைகளும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அரசின் செயல்பாடுகள், உள்நாட்டு கட்டமைப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றில் சீன நிறுவனங்களை தவிர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து பேசியுள்ள மத்திய சிறு, குறு வணிகத்துறை மந்திரி நிதின் கட்கரி “இனி நெடுஞ்சாலை பணிகளில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கூட்டுத்திட்டங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் உள்நாட்டு கட்டமைப்பு பணிகளிலும் சீன நிறுவனங்களின் பங்களிப்பு இருக்காது” என அவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் இந்த பொருளாதாரரீதியான நடவடிக்கைகள் சீனாவை கலக்கத்திற்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அதிமுகவை கைப்பற்ற ஆபரேசன் தாமரை? செங்கோட்டையன் சொல்வது என்ன?

இன்று முதல் 45 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. ரூ.75ல் இருந்து ரூ.110 கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments