8 ஆண்டுகளில் 5 முறை கூட்டணி மாறிய நிதிஷ்குமார்.. மக்கள் சுதாரிப்பார்களா?

Siva
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (11:38 IST)
கடந்த எட்டு ஆண்டுகளில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்  தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக ஐந்து முறை கூட்டணி மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் அதாவது 2017 ஆம் ஆண்டு அவர் கூட்டணி கட்சியை முடித்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் ஆனார். 
 
இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் குறைவான இடங்களில் வென்றாலும் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சர் ஆனார் 
 
ஆனால் 2022 ஆம் ஆண்டு திடீரென பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கூட்டணியுடன் மீண்டும் முதலமைச்சர் ஆனார்.
 
தற்போது மீண்டும் ஆர்.ஜேகே கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக உடன் மீண்டும் முதலமைச்சர் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  
 
கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து முறை மாறி மாறி கூட்டணி அமைத்துள்ள நிதீஷ் குமாரை இனியும் முதலமைச்சர் ஆக மக்கள் தேர்வு செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TVK: முதலமைச்சர் வேட்பாளராக விஜய்!.. அதிர்ச்சியில் அதிமுக!.. தவெக முடிவு சரியா?!...

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..

ராகுல் காந்தி உண்மையை மட்டுமே பேசுவார்: வாக்குத் திருட்டு மூலம் என்.டி.ஏ. ஆட்சி அமைக்க முயற்சி.. பிரியங்கா காந்தி

"திமுகவுக்குப் போட்டியாளர் த.வெ.க. மட்டும்தான்": 2026 தேர்தல் குறித்து விஜய் அதிரடி

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments