பிரதமர் பதவியின் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை: நிதிஷ்குமார்

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:20 IST)
எனக்கு பிரதமர் உள்பட எந்த பதவியின் மீது ஆசை இல்லை என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் மல்லிகாஜூனே கார்கே பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய போது அதற்கு நிதிஷ்குமார் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது 
 
மேலும் அவர் தன்னை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பியதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இது குறித்து நிதீஷ் குமார் பேட்டி அளித்தபோது இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கேவை பரிந்துரை செய்ததில் எனக்கு எந்த ஏமாற்றமும் மனவருத்தமோ இல்லை என்று கூறியுள்ளார். 
 
மேலும் எனக்கு பிரதமர் உள்பட எந்த பதவியின் மீதும் ஆசை இல்லை என்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்காக தொகுதி பங்கீடு விரைவாக முடிவு செய்யப்படும் என்றும் பாஜகவுக்கு எதிராக ஒன்றாக போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.  இதனை அடுத்து அடுத்த கூட்டத்தில் ஒருமனதாக பிரதமர் வேட்பாளராக மல்லிகாஜூனே கார்கே தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments