Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிஷ்குமாரிடம் போனில் பேசிய அமித்ஷா: ஆட்சி அமைப்பது உறுதியா?

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (18:05 IST)
நிதிஷ்குமாரிடம் போனில் பேசிய அமித்ஷா:
பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது என்பதை பார்த்தோம். முதல் கட்டமாக பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மாறி மாறி முன்னிலையில் வந்தாலும் ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணியின் முன்னிலை அதிகரித்துக் கொண்டே போகின்றது 
 
சற்று முன் வெளியான தகவலின்படி பாஜக கூட்டணியில் 129 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது. இந்த மாநிலத்தில் 124 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
காங்கிரஸ் கூட்டணி 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே கிட்டத்தட்ட பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டதாகவே கருதப்படுகிறது. இருப்பினும் இன்று நள்ளிரவு வரை ஓட்டு எண்ணிக்கை தொடரும் என்பதும் நள்ளிரவுக்கு மேல் தான் முழுமையான ரிசல்ட் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பீகாரில் மீண்டும் ஆட்சியை அமைப்பது குறித்து அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போனில் பேசியதாகவும் ஆட்சி அமைப்பது குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பீகாரில் மீண்டும் நிதிஷ்குமாரின் ஆட்சி தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதை அடுத்து இந்த ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments