Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டை கிழிய கத்திய நிதியமைச்சர்; தூங்கி வழிந்த அமைச்சர்கள்!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (20:42 IST)
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்தநிலை குறித்து பேசியபோது அமைச்சர்கள் தூங்கி வழியும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

டெல்லியில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அமைச்சர்கள், எம்.பிக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொருளாதார மந்தநிலை நிலவுவது குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்தநிலை ஏற்படவில்லை என்றும், வளர்ச்சி விகிதம் மட்டுமே குறைந்திருப்பதாகவும் விளக்கம் அளித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே மற்றும் அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் தூங்கி வழிந்து கொண்டிருந்தது கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது இந்த புகைப்படங்களை எதிர்க்கட்சி தொண்டர்கள் மற்றும் மீம் கிரியேட்டர்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ‘தூங்கும் இந்திய பொருளாதாரம்’ என கிண்டல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments