Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 இஸ்லாமிய நாடுகளில் குண்டு போட்டவர் ஒபாமா.. பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்
Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (07:42 IST)
பிரதமர் மோடி அமெரிக்க சென்றிருந்தபோது இஸ்லாமியர்களை பாதுகாக்கப்படாவிட்டால் இந்தியா துண்டு துண்டாக ஆகிவிடும் என தெரிவித்ததை அடுத்து ஆறு இஸ்லாமிய நாடுகளில் குண்டு போட்டது ஒபாமா தான் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். 
 
பிரதமர் மோடி அமெரிக்க சென்றபோது அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 
 
இது குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய போது அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறித்து பேசியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. 
 
இஸ்லாமியர்கள் வாழும் ஆறு நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா. அவரது ஆட்சி காலத்தில் தான் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் போடப்பட்டன என்றும் அவர் இஸ்லாமியர்கள் மீது திடீரென பாசம் வந்தது போல் பேசுகிறார் என்றும் கூறியுள்ளார். 
 
ஏற்கனவே ஒபாமாவின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அமெரிக்க எகிப்து பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை பிரதமர் மோடி இந்தியா திரும்பினார் என்பது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments