Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நிச்சயம் தூக்கு; பதறும் 4 குற்றவாளிகள்!

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (14:55 IST)
தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒவ்வொருவரும் மாறி மாறி மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
 
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை 5 பேர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. 
 
தற்போது உயிரோடு இருக்கும் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த தூக்கு தண்டனை கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்பட முடியாமல் உள்ளது
 
குற்றவாளிகளில் ஒருவராக மாறி மாறி நீதிமன்றத்தில் மனு அளித்தும் ஜனாதிபதியிடம் கருணை மனுவும் அளித்தும் வருவதால் அந்த மனுக்களின் விசாரணைகள் முடியும் வரை தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வருகிறது. 
 
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச்  20ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தர விட்டது. இதனை அடுத்து 4 குற்றவாளிகளுக்கு தூக்கிலிட அனைத்து பணிகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. 
 
குறிப்பாக குற்றவாளிகளின் எடையை கொண்ட பொம்மைகள் கொண்டு தூக்கு தண்டனை ஒத்திகை டெல்லி திகார் சிறையில் நடந்ததாகவும், இந்த ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
எனவே நிர்பயா பாலியல் குற்றவாளிகளை மார்ச்  20 ஆம் தேதி காலை 5.30-க்கு தூக்கில் போடுவது உறுதி என்று தெரிகிறது. ஆனால், இந்த முறையும் தப்பிக்க தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஒவ்வொருவரும் மாறி மாறி மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்