Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது”.. நிர்பயா தாயார் நெகிழ்ச்சி

Advertiesment
”என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது”.. நிர்பயா தாயார் நெகிழ்ச்சி

Arun Prasath

, செவ்வாய், 7 ஜனவரி 2020 (18:09 IST)
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரையும் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் “எனது மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது” என நிர்பயாவின் தாயார் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், வருகிற ஜனவரி 22 ஆம் தேதி காலை 7 மணிக்குள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.
webdunia

இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்த நிர்பயாவின் தாயார் “ நீதிமன்ற உத்தரவு மூலம் எனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிடுவதன் மூலம் பெண்களுக்கு வலிமை கிடைக்கும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதவி பங்கீடு: பாமக, தேமுதிகவுடன் எடப்பாடியார் ஆலோசனை!