நிர்பயா குற்றவாளி கருணை மனு..

Arun Prasath
புதன், 29 ஜனவரி 2020 (20:15 IST)
நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளை வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய சிறை நிர்வாகம் போதிய ஆவணங்களைத் தர மறுப்பதாக குற்றவாளிகளில் இருவரான அக்சய்குமார் சிங், பவன்குமார் சிங் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து ஆவணங்கள் தரப்பட்டதாக சிறை தரப்பு பதிலளித்த நிலையில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து மற்றொரு தூக்குத் தண்டனை குற்றவாளியான வினய் குமார் ஷர்மா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு கருணை மனு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்