Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2,000 ரூபாயை நிறுத்த திட்டமா? நிர்மலா சீதாராமன் பதில்

2,000 ரூபாயை நிறுத்த திட்டமா? நிர்மலா சீதாராமன் பதில்
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (15:29 IST)
ரூ.2,000 நோட்டுகள் வழங்குவதை நிறுத்துமாறு வங்கிகள் முடிவெடுத்திருப்பது குறித்து நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். 
 
2016 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நீக்கம் செய்ததை தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. தொடர்ந்து 500, 100, 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளும் புதிய வடிவில் புழக்கத்திற்கு வந்தன. ஆரம்பத்தில் மற்ற ரூபாய் நோட்டுகள் அதிகளவில் அச்சிடப்படாமல் இருந்ததால் 2000 ரூபாய் நோட்டு அதிகமாக புழக்கத்தில் இருந்தன.
 
நாளடைவில் தற்போது அனைத்து ரூபாய் நோட்டுகளும் தேவையான அளவு இருப்பதால் இந்தியாவின் உயர்மதிப்புடையதான 2000 ரூபாய் நோட்டின் புழக்கத்தை குறைக்க உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் புதியதாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ள நிலையில் வங்கிகளிலும் ஏடிஎம் எந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறும் அம்சத்தை நீக்கி விட்டு 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை நிரப்ப இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே 2000 ரூபாய் பயன்பாடு இருக்கும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இது விளக்கம் அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் கூறியதாவது, ரூ.2,000 நோட்டுகள் வழங்குவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு எந்த உத்தரவும் மத்திய அரசின் சார்பில் பிறப்பிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்தின் மீதும் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருந்துக் கடையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – காமக்கொடூரன் கைது!