Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 15 April 2025
webdunia

குறையத் தொடங்கிய நிபா தொற்று; கட்டுப்பாட்டில் தளர்வுகள்! – கேரள அரசு அறிவிப்பு!

Advertiesment
Nipah
, வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (10:36 IST)
கேரளாவில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.



2018ம் ஆண்டில் கேரளாவையே உலுக்கிய வைரஸ் நிபா. சமீபத்தில் மீண்டும் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கோழிக்கோட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதுடன் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

சுகாதாரத் துறை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட 9 பஞ்சாயத்துகளில் அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

மேலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில் கடைகள், சந்தைகள் இரவு 8 மணி வரையிலும், வங்கிகள், அரசு அலுவலகங்கள் மதியம் 2 மணி வரையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஐபோன்15 சீரிஸ் போன்கள்! விலை இவ்வளவா?