Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம் என அறிவிப்பு..!

Banglore Blast

Mahendran

, வெள்ளி, 29 மார்ச் 2024 (19:27 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடித்த நிலையில் இந்த சம்பவத்தில் இரண்டு பேர் தேடப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறித்த தகவல் தெரிவிப்பதற்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும் என்று கூறியுள்ள தேசிய புலனாய்வு முகமை தகவல் கொடுக்க வேண்டிய ஈமெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. [email protected] என்ற இமெயிலுக்கும்  080 2951099, 890424110 ஆகிய தொலைபேசி எண்களுக்கும் தகவல் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மார்ச் 1ஆம் தேதி ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்த நிலையில் இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கை பெங்களூர் மாநகர குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தேசியப் புலனாய்வு முகமை தனித்தனியே விசாரித்து வரும் நிலையில் குற்றவாளியை தற்போது தேசிய புலனாய்வு முகமை அடையாளம் கண்டு புகைப்படத்தையும் வெளியிட்டது 
 
இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர்களை கண்டுபிடித்து கொடுத்தால் 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.இதனை அடுத்து விரைவில் சம்பந்தப்பட்ட நபர் பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் தலையில் அரசின் கடன் சுமை.! அதிமுக திட்டங்கள் முடக்கம்..! இபிஎஸ் சரமாரி புகார்.!!