Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமைக்ரான் எதிரொலி... டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள்

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (16:32 IST)
ஒமைக்ரான் கொரோனா வகை தொற்று அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒளி ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நுழைந்த ஒமிக்ரான் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் தமிழ்நாடு உட்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 135 பேர்களுக்கு ஒமிக்ரான் பரவி உள்ளதாகவும் இதனை அடுத்து ஒமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
டெல்லியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 63 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பதும் இதுவரை நாட்டின் எந்த மாநிலத்திலும் பதிவு செய்யப்படாத அளவில் அதிகபட்சமாக டெல்லியில் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் மீண்டும் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒமைக்ரான் கொரோனா வகை தொற்று அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகளை உடனடியாக மூட உத்தரவு
மெட்ரோ, உணவகங்கள், மதுபான கூடங்கள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட அனுமதி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்
அரசியல் கூட்டங்கள், மத விழாக்கள், கொண்டாட்டங்களுக்கு முற்றிலுமாக தடை 
வணிக வளாகத்திலுள்ள கடைகளை திறப்பதிலும் டெல்லி அரசு கட்டுப்பாடு

தொடர்புடைய செய்திகள்

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை: தொண்டர்களுக்கு துரை வைகோ முக்கிய வேண்டுகோள்..!

சென்னையில் இன்று வெயில் உக்கிரமாக இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை..!

நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்.. விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!

ஒரு தமிழர் முதல்வராவதை பார்த்து சகித்து கொண்டிருக்க மாட்டோம்: ஒடிஷாவில் அமித்ஷா ஆவேசம்..!

அரசியல் வியாதி உள்ள அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது? ஜெயக்குமார் பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments