Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகள்: மகாராஷ்டிரா மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (07:31 IST)
இந்தியாவிலேயே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்படும் இந்த கட்டுப்பாடுகள் மே 1ஆம் தேதி காலை 7 மணி வரை இருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது
 
இதன்படி திருமண நிகழ்ச்சிகள் இரண்டு மணி நேரம் மட்டுமே நடைபெறவேண்டும் என்றும் திருமண நிகழ்ச்சியில் 25 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவமனை மற்றும் ஈமச்சடங்கு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்வதற்கு மட்டுமே பயணம் செய்ய வேண்டுமென்றும், பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களில் 15 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்றும், தனியார் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் அனைவருமே வீட்டிலிருந்துதான் பணிபுரிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த விதிகளை மீறுவோர் மீது 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதமப்ரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்