பூமியில் இருந்து 400 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் மாபெரும் கேலக்ஸி இருப்பதை கண்டறிந்து உள்ளனர் இந்திய விஞ்ஞானிகள்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு மையத்தின் ஆய்வு மாணவர் இந்த புதிய கேலக்ஸி கூட்டத்தைக் கண்டறிந்துள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கேலக்ஸி கூட்டங்களில் இதுவே பெரியதாக கருதப்படுகிறது. இந்த கேலக்ஸி கூட்டத்திற்கு சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கேலக்ஸியில் கிரகங்கள் ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று பிணைந்து கூட்டமாக்கக் காணப்படுகின்றன. பல ஆயிரம் கோடி சூரியக்குடும்பங்கள் இதில் அடங்கும். மேலும் இதை பற்றின ஆய்வுகள் தொடர்ந்து வருகிறது.