Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று முதல் அமலாகிறது பாஸ்டேக் புதிய நடைமுறை.. கே.ஒய்.சி. விவரங்களை தெரிவிக்க கெடு..!

இன்று முதல் அமலாகிறது பாஸ்டேக் புதிய நடைமுறை..  கே.ஒய்.சி. விவரங்களை தெரிவிக்க கெடு..!

Siva

, வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (07:16 IST)
பாஸ்டேக் புதிய நடைமுறையில் வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை, பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும் என்ற நடைமுறை இன்று முதல் அமலாகிறது. மேலும்  வாகனங்களுக்கான 'பாஸ்டேக்' தொடர்பான சில நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

தேசிய பண பரிவர்த்தனை வாரியம் அறிவித்துள்ள நடைமுறைகள் இன்று அமலுக்கு வந்துள்ளது. 'பாஸ்டேக்'  வாங்கியோர் கே.ஒய்.சி. விவரங்களை  வரும், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்துவதற்கு காத்திருப்பதை தவிர்க்க, மோசடிகளை தவிர்க்க இன்று முதல் புதிய பாஸ்டேக் முறை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பாஸ்டேக் ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்ட வேண்டும். இதன் காரணமாக நேரடியாக வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும்.

சுங்கச்சாவடிகளில் காத்திருந்து பணம் செலுத்துவதை தவிர்க்க இந்த நடைமுறை உதவும். இதனால்  நேரம் விரயமாவதை தடுக்கப்படும். இந்த நடைமுறை அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 வருடம் வயநாடு எம்பியாக இருந்த ராகுல் காந்தி செய்தது என்ன? பாஜக பிரமுகர் கேள்வி..!