ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உடனடியாக பான் எண் கிடைக்கும் வகையில் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி ஒருசில நிமிடங்களில் பான் எண்ணை பெறலாம்.
ஆதார் அட்டையில் ஏற்கனவே ஒருவரது கருவிழி மற்றும் கைரேகை பதிவுகள் இருப்பதால் இந்த வசதியை பயன்படுத்தி அவருக்கு உடனடியக ‘பான்’ எண் வழங்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
எளிய முறையில் பான் எண் வழங்குவதன் மூலம் இன்னும் அதிக நபர்களை வருமான வரி வளையத்துக்குள் கொண்டுவர முடியும் என்ற நோக்கத்திற்காக இந்த மொபைல் ஆப் அறிமுகம் செய்யவுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதற்காக மொபைல் ஆப் செய்யும் பணி தொடங்கிவிட்டதாகவும் மிக விரைவில் இந்த ஆப் அறிமுகம் செய்யப்படும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து வருமான வரி உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, 'மொபைல் ஆப் உருவாக்கும் பணி தொடக்க நிலையில் உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என்று கூறினார்.